தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

BWF World Championships: வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்; லக்ஷயாவிற்கு வெண்கலம் - பிவி சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் 0-2 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ-விடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்,BWF silver medallist Srikanth
வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்

By

Published : Dec 21, 2021, 7:24 AM IST

ஸ்பெயின்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் தலைநகர் ஹூல்வாவில் நடைபெற்று வந்தது. இதன், இறுதிப்போட்டி நேற்று (டிச. 20) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ உடன் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் மோதினார்.

முன்னதாக, அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-ஐ ஸ்ரீகாந்த் வீழ்த்தினார். இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றார்.

நேர் செட்டில் தோல்வி

இந்நிலையில், இறுதிப்போட்டியை வெல்லும் நோக்கோடு ஸ்ரீகாந்த களம் கண்டார். ஆனால், கீன் யூ தொடக்கத்தில் இருந்தே ஸ்ரீகாந்த் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

ஸ்ரீகாந்த் எவ்வளவு முயன்றும் ஆட்டத்தை அவர் வசம் திருப்ப முடியவில்லை. இறுதிவரை சிறப்பாக விளையாடிய கீன் யூ 21-15, 22-20 என்ற கணக்கில் நேட் செட்டை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்த, வெண்கலப் பதக்கத்தை லக்ஷயா சென் வென்று இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை பெற்றுத்தந்தனர்.

இதன்மூலம், உலக சாம்பியன் லோ கீன் யூ, இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பி.வி.சிந்து ஆகியோர் நேரடியாக இந்தியா ஓபன் 2022 தொடரில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டென்னிஸ் வீரர் நடாலுக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details