தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன்: இறுதி சுற்றில் கிதாம்பி ஸ்ரீகாந்த்! - இந்திய ஓபன் பேட்மிண்டன்

டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், சீன வீரர் ஹூவாங் ஸியாங்கை (Huang Yuxiang) வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய ஓபன் பேட்மிண்டன்,இறுதி சுற்றில் கிதாம்பி ஸ்ரீகாந்த்

By

Published : Mar 30, 2019, 6:49 PM IST

இந்திய பேட்மிண்டன் ஓபன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் ஹூவாங் ஸியாங்கை (Huang Yuxiang) எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் முதல் செட்டை 16-21 என்ற கணக்கில், தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் எழுச்சியுடன் ஆடினார். இதன் பலனாக, 21-14 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்ற, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது.

இதில், இவ்விரு வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சீன வீரர் ஹூவாங்கை விட துல்லியமான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்ரீகாந்த் 21-19 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றார்.

இதன் மூலம், கிதாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஹூவாங் ஸியாங்கை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details