உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இஸ்ரேலின், மிசா ஜில்பர்மேன்(Misha Zilberman) எதிர்கொண்டார்.
#BWFWorldChampionships: முன்றாம் சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்! - indian badminton
பசெல்: உலக பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
kidambi
முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் 13-21 என்ற கணக்கில் ஜில்பர்மேனிடன் முதல் செட்டை இழந்தார். அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்ரீகாந்த், 21-13, 21-16 என்ற கணக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்ரீகாந்த் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.