கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவின் க்வாங்ஜு நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் ஆறாம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை காண்டா 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்ரீகாந்திற்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய காண்டா இரண்டாவது செட்டையும் 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.