பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரிசில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் தாய்வான் வீரர் சோ டியன் சென்னை எதிர்கொண்டர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் - வெளியேறிய கிதாம்பி ஸ்ரீகாந்த் - french open
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப்போட்டியில் தாய்வான் வீரரிடம் தோல்வியுற்ற இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை கிதாம்பி ஸ்ரீகாந்த் 21-15 எனக் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு சுற்றுகளில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாய்வான் வீரர் 21-7, 21-14 என்ற கணக்கில் திதாம்பியை வீழ்த்தினார். இதனால் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிப்போட்டிகளில் இந்திய வீரர்கள் பருப்லி காஷ்யப் ஹாங்காங் வீரரிடமும் சமீர் வர்மா ஜப்பான் வீரரிடம் தோல்வியுற்றனர். இது இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.