பிரபல பேட்மிண்டன் தொடரான ஆல் இங்கிலாந்து ஓபன் தொடர் இங்கிலாந்தில் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் மூன்று இந்திய வீரர்கள், அணி ஊழியர்கள் என நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி இத்தொடரை தாமதமாக நடத்தவுள்ளதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு, இங்கிலாந்து பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படும் வீரர்களுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது. இத்தகவலை இந்திய அணியின் பயிற்சியாளர் மத்தியாஸ் போ உறுதிசெய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆல் இங்கிலாந்து ஓபன் பெட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும். திட்டமிட்டபடி இன்று ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரை நடத்தவும் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய தடகள சாம்பியன்ஷிப்: பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு!