கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமலே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டோக்கியோவில் நடைபெறவிருந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டி தொடரும் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், கடந்த இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் ஓபன், இந்தோனேஷிய ஓபன் உள்ளிட்ட பல பேட்மிண்டன் தொடர்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், கரோனா வைரஸால் தள்ளிவைக்கப்பட்ட பேட்மிண்டன் தொடருக்கான அட்டவனையை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு (பி.டபள்யூ.எஃப்) மாற்றியமைத்து புதுபிக்கப்பட்ட அட்டவனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் ஓபன் தொடர் வரும் ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு, சீன மாஸ்டர்ஸ், தைபே ஓபன், கொரியா ஓபன், சையத் மோடி ஓபன், நியூசிலாந்து ஓபன் உள்ளிட்ட தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.
இதில், மார்ச் மாதம் 24 முதல் 29வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய ஓபன் தொடர் வரும் டிசம்பர் 8 முதல் 13வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.டபள்யூ.எஃப் புதுபிக்கப்பட்ட அட்டவனையின் படி ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களில் 22 தொடர்கள் வரிசையாக நடைபெறவுள்ளன.
பி.டபள்யூ.எஃப் வெளியிட்ட இந்த நெருக்கடியான அட்டவனைக்கு இந்திய நட்சத்திரங்களான பாருபள்ளி காஷ்யப், சாய்னா நெவால், சாய் பிரனீத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மாதங்களில் 22 தொடர்கள் நடைபெறுவது பரவாயில்லை.