தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆர்லியன்ஸ் பேட்மிண்டன்: தொடரிலிருந்து நடையைக் கட்டிய காஷ்யப், அஜய் ஜெயராம்

ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் காஷ்யப், அஜய் ஜெயராம் ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.

பேட்மிண்டன் வீரர் காஷ்யப்

By

Published : Mar 22, 2019, 4:52 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸின் ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய நட்சத்திர வீரர் காஷ்யப், ஜப்பானின் கோகி வாடானாப்புடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் காஷ்யப் 14-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் கோகி வாடானாப்பிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்திலும், இந்திய வீரர் அஜய் ஜெயராம், ரஷ்யிாவை சேர்ந்த தாமஸ் ரோக்ஸலிடம் (Thomas Rouxel) 10-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மேலும் இந்தத் தொடரில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 9-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியி வீரர் கட்ரஜா ஃபிலியங்யிடம் (Gatraja Philing) போராடி வீழ்ந்தார்.

இதனைத்தொடர்ந்து,மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை முக்தா 10-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்ஸர்லாந்தின் சப்ரினா ஜெக்குவேட் (Sabrina Jaquet) தோல்வி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, மகளிர் இரட்டையர் சுற்றுப் போட்டியிலும், இந்திய வீராங்கனை பூஜா, சஞ்சனா இணை மற்றும் த்ரூவ் கபிலா, குஹூ கார்க் ஜோடி போராடி வீழ்ந்தினர்.

ABOUT THE AUTHOR

...view details