தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம் - பாருப்பள்ளி காஷ்யப் முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்குள் காலடி வைத்துள்ளனர்.

H.S. Prannoy

By

Published : Nov 14, 2019, 8:59 AM IST

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-17, 21-17 என்ற நேர்செட்களில் சீனாவின் ஹுவாங் யு யியாங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோன்று மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் பாருப்பள்ளி காஷ்யப் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவையும் (21-18, 16-21, 21-10), சவுரப் வர்மா ஃபிரான்சின் பிரைஸ் லெவர்டெஸையும் 21-11, 21-15 என வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

மற்றொரு முதல் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் கென்டோ மொமோட்டா விலகியதால் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

இது தவிர ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் உலகின் ஏழாம் நிலை ஜோடியான இந்தியாவின் சாத்விக்சாய் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் ஜப்பானின் டக்குரோ ஹோக்கி யுகோ கோபயாஷியை எதிர்கொண்டனர். முதல் செட்டை இந்திய இணை 21-17 வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் அடுத்த இரண்டு செட்களை 16-21, 17-21 என இழந்ததால் இந்திய இணை முதல் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது.

இந்திய இரட்டையர் இணை

முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதேவேளையில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் ஒருமுறை முதல் சுற்றோடு வெளியேறி இந்திய ரசிகர்களை ஏமாற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details