பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இரண்டாவது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான இந்தோனேஷிய வீரர்கள் மொகம்மது ஹசன், ஹெண்ட்ரா சேதியாவான் ஆகியோரை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர்கள் - Satwik and Chirag in french open badminton semis
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
badminton
இதனிடையே நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ருப் - ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முஸ்ஸென் இணையுடன் மோதியது. இப்போட்டியிலும் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 21-13, 22-20 என்ற செட்கணக்கில் டென்மார்க் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் காலடி வைத்துள்ளது.