தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#BWFWorldChampionships: தொடரிலிருந்து வெளியேறிய சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய்! - kidambi srikanth

பசெல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் மகளிர் பிரிவில் சாய்னா நேவால், ஆண்கள் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரணாய் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

saina newal

By

Published : Aug 23, 2019, 11:55 AM IST

Updated : Aug 23, 2019, 1:17 PM IST

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்டை(Mia Blichfeldt) எதிர்கொண்டார்.

சாய்னா நேவால்

ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் செட்டை 21-15 கைப்பற்றிய சாய்னா நேவால், இரண்டாவது செட்டை மியாவிடம் 25-27 என போராடி இழந்தார். அதன் பின் மூன்றாவது செட் புள்ளியை 12-21 என்ற கணக்கில் மியா கைப்பற்றினார்.

இதன்மூலம் சாய்னா நேவால் 21-15, 25-27, 12-21 என்ற செட்கணக்கில் மியா பிளிச்ஃபெல்டிடம் தோல்வியடைந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறினார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஆண்கள் பிரிவு மூன்றாவது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தாய்லாந்தின் கான்ட்டஃபோன் வாங்சரோனை (Kantaphon Wangcharoen) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வாங்சரோன் 21-14, 21-13 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரரான ஜப்பானின் கென்ட்டோ மொமாடா(Kento Momota) எதிர்கொண்டார். இதில் பிரணாய் 19-21, 12-21 என்ற செட் கணக்கில் மொமோடாவிடம் போராடி தோல்வியடைந்தார்.

இதன்மூலம் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தனர்.

Last Updated : Aug 23, 2019, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details