தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#BWFWorldChampionships:காலிறுதிச் சுற்றை உறுதிப்படுத்திய சிந்து, சாய் பிரனீத்! - PV sindhu

பசெல்: உலக பேட்மிண்டன் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரார்கள் பி.வி. சிந்து, சாய் பிரனீத் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

PV Sindhu & Sai Praneeth

By

Published : Aug 23, 2019, 10:13 AM IST

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, அமெரிக்காவின் பீவென் ஸாங்கை (Beiwen zhang) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய பி.வி. சிந்து 21-14, 21-6 என்ற செட்கணக்கில் பீவென் ஸாங்கை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவை (Anthony Sinisuka) எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய சாய் பிரனீத் 21-19, 21-13 என்ற செட்கணக்கில் அந்தோணி சினிசுகாவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் சாய் பிரனீத் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் பேட்டிக்கு தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details