புனே : பேட்மிண்டனில் சர்வதேச பட்டம் பெற்ற முதல் இந்தியர் நந்து நடேகர் இன்று (ஜூலை 28) காலமானார். இவர் 1956ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் பட்டம் வென்றிருந்தார்.
88 வயதான நந்து நடேகர் தனது மகன் கௌரவ் மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆகியோருடன் வசித்துவந்தார். மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் பிறந்தவர் நந்து நடேகர். இவர் 100க்கும் மேற்பட்ட பட்டங்களை பேட்மிண்டனில் பெற்றுள்ளார்.
இவர் பேட்மிண்டன் வீரராக திகழ்ந்தபோது உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.