இந்த ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர் சீனாவின் லீ சியூக்கை எதிர்கொண்டார்.
தோல்வியில் முடிந்த கிதாம்பி ஸ்ரீகாந்தின் போராட்டம்! - பேட்மிண்டன் செய்திகள்
ஹாங்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் 9-21, 23-25 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் லீ சியூக்கிடம் தோல்வி அடைந்தார்.
Kidambi srikanth
‘இதைத்தொடர்ந்து, நடைபெற்ற முதல் செட்டில் ஸ்ரீகாந்த், 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், இரண்டாவது செட்டில் வெற்றிபெற்று இப்போட்டியில் கம்பேக் தர முயற்சித்தார். ஆனால், பரபரப்பாக நடைபெற்ற இரண்டாம் செட்டில் அவர் 23-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தார்.
இதன் மூலம், கிதாம்பி ஸ்ரீகாந்த் 9-21, 23-25 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியுற்றார். இந்தத் தொடரில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.