தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது: கோபிசந்த்! - கோபிசந்த்

டெல்லி: இந்த ஆண்டு டோக்யோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக பேட்மிண்டன் தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

gopichand-hopeful-of-best-ever-showing-from-badminton-players-in-2020-olympics
gopichand-hopeful-of-best-ever-showing-from-badminton-players-in-2020-olympics

By

Published : Jan 3, 2020, 11:43 PM IST

2020ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு நடத்தும் கேலோ இந்தியா யூத் கேம்ஸின் தொடக்க விழாவில் பேட்மிண்டனுக்கான தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இம்முறை உலக சாம்பியன் என்னும் பட்டத்துடன் பங்கேற்கவுள்ளோம்.

ஒலிம்பிக் தொடருக்காக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை ஆடிய போட்டிகளை விடவும் ஒலிம்பிக்கில் முழுத்திறமையும் நிச்சயம் வெளிப்படும். பேட்மிண்டன் விளையாட்டிற்கு திறமையுடன் சேர்ந்து உடல்தகுதி, மனவலிமை ஆகியவை மிகமுக்கியமானது என பேசினார்.

கோபிசந்த்

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் குறித்து பேசுகையில், மத்திய அரசின் இந்த முயற்சி இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டின் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும், அவர்களுக்கான பயிற்சியும் இந்தியாவின் கீழ் நிலை விளையாட்டு வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும் என்றார்.

இதையும் படிங்க: Badminton 2019: பி.வி. சிந்து முதல் மானஸி ஜோஷிவரை சாதனை படைத்த இந்தியர்கள்

ABOUT THE AUTHOR

...view details