சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் உலகின் நம்பர் ஒன் வீரரான சஞ்சய சுகமுல்ஜோ, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து இம்மாதம் நடைபெறும் தாய்லாந்து ஓபன் தொடரிலிருந்து மார்கஸ் ஃபெர்னால்டி - சஞ்சய சுகமுல்ஜோ இணை விலகுவதாக அறிவித்துள்ளனர். இத்தகவலை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.