சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரின், நடப்பாண்டிற்கான சீசன் இன்று முதல் தொடங்க இருந்தது.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்க இருந்த மூன்று இந்திய வீரர்கள், அணி ஊழியர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று தொடங்க இருந்த ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரை தாமதமாக நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021ஆம் ஆண்டிற்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கவுள்ள சில வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பும், இங்கிலாந்து பேட்மிண்டன் கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது.
மேலும், பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட ஒருசில வீரர்களின் மாதிரிகள் முடிவில்லாமல் இருப்பதால், நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரை, தாமதமாக தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதேசமயம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள வீரர்களை மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆடவர் அணியின் பயிற்சியாளராக மாறிய கிரிக்கெட் வீராங்கனை!