சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே அசத்திய இந்திய வீரர்கள் அசத்தலாக இரண்டாவது சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், ஐந்து முறை உலக சாம்பியன் பெற்றவரான சீனாவின் லின் டானை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டியேலயே 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரனாய் லின் டானிற்கு அதிர்ச்சியளித்தார். பின்னர், இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட முன்னாள் உலக சாம்பியன் 21-13 என இந்திய வீரரை வீழ்த்தினார். இறுதி செட்டை 21-7 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய பிரனாய், லின் டானை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன் லின் டான் பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.