தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நான் செய்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்' - பி.வி. சிந்து

நான் செய்த தவறுகளிலிருந்து ஒவ்வொரு முறையும் நிறைய கற்றுவருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE: 'I have learnt from my mistakes in Thailand Open, happy to make a strong comeback,' says PV Sindhu
EXCLUSIVE: 'I have learnt from my mistakes in Thailand Open, happy to make a strong comeback,' says PV Sindhu

By

Published : Mar 15, 2021, 7:21 PM IST

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை, உலக பேட்மிண்டன் சாம்பியனுமானவர் பி.வி. சிந்து. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் தோல்வியடைந்த இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், ஓவ்வொரு தொடரின்போதும் தான் செய்யும் தவறுகளிலிருந்து நிறைய கற்றுவருவதாக பி.வி. சிந்து ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாகத் தெரிவித்துள்ளார். பி.வி. சிந்துவுடனான உரையாடல் இதோ...

கேள்வி: சுவிஸ் ஓபனில் உங்கள் செயல்திறன் குறித்து நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பி.வி. சிந்து: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிவரை நான் முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி இல்லை. ஏனெனில் இறுதிப் போட்டிவரை நான் முன்னேற நிறைய உழைத்துள்ளேன். அப்படி இருந்தும் நான் தவறான யுக்தியைப் பின்பற்றியதே காரணம் என நினைக்கிறேன். இருப்பினும் நான் எனது தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி: சமீபத்தில் நடந்த சில போட்டிகளில் நீங்கள் தொடக்கத்திலேயே வெளியேறினீர்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்? அதற்காக நீங்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்தீர்கள்?

பி.வி. சிந்து: நான் தாய்லாந்து ஓபன் தொடரை வெல்ல நினைக்கவில்லை. ஆனால் எனது தவறுகளைச் சரிசெய்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொரு தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை தாய்லாந்து ஓபன் தொடரில் நான் கற்றுக்கொண்டேன். அதனால் அடுத்தடுத்து போட்டிகளில் எனது தவறுகளைச் சரிசெய்ய முயற்சித்தேன். அதன் பயனாகவே நான் சுவிஸ் ஓபனின் இறுதிப்போட்டி வரை முன்னேற உதவியாக அமைந்தது.

கேள்வி: கரோனா ஊரடங்கு உங்கள் விளையாட்டை எந்த வகையிலாவது பாதித்ததா?

பி.வி. சிந்து: ஊரடங்கின்போது நான் எனது வீட்டிலேயே பயிற்சிகளைச் செய்துவந்ததால், என் விளையாட்டை பாதித்ததாக எனக்குத் தோன்றவில்லை. இருப்பினும் ஊரடங்கிற்குப் பிறகு நாங்கள் மீண்டும் விளையாட்டை தொடர்வதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொண்டது. ஆனால், நாங்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

கேள்வி: சுவிஸ் ஓபன் இறுதிப் போட்டியில் கரோலினா மரினை எதிர்த்து விளையாடியது எப்படி இருந்தது?

பி.வி. சிந்து: கரோலினா மரின் ஒரு ஆக்ரோஷமான வீராங்கனை. அவரை எதிர்த்து விளையாடுவது அவ்வளவு எளிதானது அல்ல. அவருக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான் சில தவறுகளைச் செய்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த முறை அவருக்கு எதிராக விளையாடும்போது எனது தவறைத் திருத்தி, புதிய யுக்தியுடன் விளையாடுவேன்.

கேள்வி: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் உங்களது சிறப்பான ஆட்டங்களைத் தொடர்வீர்கள் என நினைக்கிறீர்களா?

பி.வி. சிந்து: நான் இப்போது சூரிச்சில் தங்கி பயிற்சிப் பெற்றுவருகிறேன். அதன்பின் நாங்கள் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ளோம். இத்தொடரின் முதல் சுற்றிலிருந்தே நான் என்னுடைய நூறு விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். முதல் சுற்றில் தரவரிசையில் பின்தங்கிய வீராங்கனை என எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு போட்டியும் உங்களுக்கு முக்கியமானது என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக்கொண்டு விளையாட வேண்டும்.

சுவிஸ் ஓபன் தொடருக்குப் பிறகு என்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விளையாட்டு எல்லா நேரங்களிலும் வித்தியாசமான ஒன்று. ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களுக்கான தனி யுக்திகள் உள்ளன. அதனால் இத்தொடரை நான் புதிய தொடக்கமாக நினைத்து எனது நூறு விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவது முக்கியம்.

கேள்வி: மீண்டும் பாசலில் விளையாடியது எப்படி இருக்கும்?

பி.வி. சிந்து: முன்னதாக பாசலில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடியது மிகவும் நன்றாக இருந்தது. தற்போது பாசலில் மீண்டும் விளையாடுவது நன்றாக அமையும் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க: SLvsWI: இலங்கையை ஒயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details