இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை 2012ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரில் சாதிக்க வேண்டும் என்ற பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதைப்பற்றி அவர் பேசுகையில், '' நிச்சயம் ஒலிம்பிக் பற்றி எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு தயாராவதற்கு நான் இன்னும் அதிக அளவிலான தொடர்களில் பங்கேற்க வேண்டும். பல போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். மீண்டும் ஃபார்மிற்கு வந்த டாப் 20 வீராங்கனைகளை வீழ்த்த வேண்டும்.
இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரையில் பயிற்சிகள் மீதமுள்ளது. இன்னும் 7 முதல் 8 தொடர்களில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தான் ஒலிம்பிக் தொடர் பற்றி சிந்திக்க முடியும். ஒலிம்பிக் தொடரில் நன்றாக ஆட வேண்டும். நான் நிச்சயம் ஒலிம்பிக்கில் பங்கேற்பேன். என்னைப் பொறுத்தவரையில் வயது ஒரு பிரச்னை இல்லை. டென்னிஸில் நடால், ஃபெடரர், ஜோகோவிச், செரீனா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். அவர்களை போல் நானும் 30 வயதிற்கு பின்னும் நன்றாக ஆடுவேன் என்று நினைக்கிறேன். பெரும் போராட்டம் காத்திருக்கிறது.
சில நேரங்களில் நான் விளையாட வேண்டாம். என்னால் இதன்பின் வெற்றிபெற முடியாது என்று தோன்றும். ஆனால் இவையனைத்தையும் மீறி வெற்றிபெற வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். வீட்டில் அமர்ந்து கொண்டு சும்மா இருக்க முடியாது. பேட்மிண்டன் ஆடுவது தான் என் வாழ்க்கை. அதுதான் என் வேலை'' என்றார்.
இதையும் படிங்க:பாக். கேப்டன் பாபர் அஸாம் மீது பாலியல் புகார்...!