கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு செப்படம்பர் மாதம் ஆக்லாந்தில் நடைபெறுவதாக இருந்த ஜூனியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தொடருக்கான மாற்று தேதியை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நியூசிலாந்தில் இந்தாண்டு நடைபெறுவதாக இருந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் கலப்பு இரட்டையருக்கான ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரான ஜனவரி 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.