இந்திய விளையாட்டுக் கழகம் சார்பாக டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்ட மேம்பாட்டுக் குழு மூலம் 12 விளையாட்டு பிரிவுகளின் கீழ் இந்தியா முழுவதும் சிறப்பாக விளையாடும் 258 வீரர்களைப் பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது.
அதில் ஓட்டப்பந்தயத்தில் 16 வீரர்களும், ஆர்செரியில் 34 பேரும், பேட்மிண்டனில் 27 பேரும். சைக்கிளிங்கில் 4 பேரும், டேபிள் டென்னிஸில் 7 பேரும், துப்பாக்கிச் சுடுதலில் 70 பேரும், நீச்சலில் 14 பேரும், குத்துச்சண்டையில் 36 பேரும், பளு தூக்குதலில் 16 பேரும், மல்யுத்தத்தில் 18 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25 ஆயிரம் பயிற்சிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த டார்கெட் ஒலிம்பிக் போடியம் என்பது ஒலிம்பிக் தொடருக்காக வீரர்களைத் தயார் செய்யும் திட்டமாகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து 2 வீரர்கள் டாப்ஸ் பயிற்சிக்கு தேர்வாகி இருக்கின்றனர். அதில் ஒருவர் கோவை காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்(21). ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.