சீனாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லின் டான். இவர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனாவிற்காக இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று வந்த லின் டான், தற்போது அனைத்து விதமான சர்வதேச பேட்மிண்டன் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து லின் டான் வெளியிட்டுள்ள பதிவில், "2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் இந்த விளையாட்டில் நீடித்த பிறகு, தற்போது நான் தேசிய அணியிலிருந்து விடைபெறவுள்ளேன்.மேலும் அதனை பற்றி பேசுவது மிகவும் கடினமான ஒன்று" என பதிவிட்டுள்ளார்.
லின் டான் தனது ஓய்வு முடிவு குறித்தான அனைத்து விண்ணப்பத்தையும், சில நாட்களுக்கு முன் எங்களிடம் ஒப்படைத்தார் என சீன பேட்மிண்டன் சங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடைபெறும் - பிசிசிஐ