தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#chinaOpen2019: முதல் சுற்றிலேயே மூட்டையை கட்டிய சாய்னா! - இரண்டாவது முறையாக தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

saina nehwal

By

Published : Sep 18, 2019, 9:55 AM IST

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்தின் புசனன் ஒங்பாம்ருங்பானை (Busanan Ongbamrungphan) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சாய்னா நேவால் அதிரடி காட்டினாலும் பின்னர் புசனனின் அபார ஆட்டத்தால் வீழ்ந்தார். புசனன் 21-10, 21-17 என்ற நேர் செட்கணக்குகளில் சாய்னா நேவாலை தோற்கடித்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சீனா ஒபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details