தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாவது சுற்றிலேயே வெளியேறிய உலக சாம்பியன் - ரசிகர்கள் அதிர்ச்சி! - ChinaOpenSuper1000

2019ஆம் ஆண்டிற்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றிலேயே உலக சாம்பியனான பி.வி.சிந்து தாய்லாந்தின் சோசுவாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

பி.வி.சிந்து

By

Published : Sep 19, 2019, 7:03 PM IST

2019ஆம் ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்துவை எதிர்த்து தாய்லாந்தின் சோசுவாங் ஆடினார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 12-21 எனக் கைப்பற்ரியதால், இரண்டாம் செட் ஆட்டத்தையும் அவரே கைப்பற்றுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுத்த தாய்லாந்து வீராங்கனை சோசுவாங், இரண்டாவது செட்டை 21-13 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார்.

இதனால் மூன்றாவது செட்டை கைப்பற்றி யார் வெற்றியாளராக வருவார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் சரிக்கு சமமாக போட்டியிட்டனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடியாக ஆட, இறுதியாக தாய்லாந்து வீராங்கனை சோசுவாங் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

உலக சாம்பியனான சில நாட்களிலேயே இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சீன ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியெறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 63 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

ABOUT THE AUTHOR

...view details