தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டனில் கம்பேக் தந்த கரோலினா மரின் - கரோலினா மரின் பேட்மிண்டன் வீராங்கனை

எட்டு மாதங்களுப் பிறகு மீண்டும் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலினா மெரின் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Carolina Marin

By

Published : Sep 22, 2019, 10:00 PM IST

2019ஆம் ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்றுவருகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்மிண்டனில் ரீ என்ட்ரி தந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அவர், சீன தைபே நாட்டைச் சேர்ந்த தை சூ யிங் உடன் மோதினார். முதல் செட்டில் 14-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கரோலினா மரின், தனது ஆட்டத்தில் எழுச்சி பெற்று 21-17, 21-18 என்ற கணக்கில் இரண்டாவது, மூன்றாவது செட்டை கைப்பற்றினார்.

இதன்மூலம், அவர் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் தை சூ யிங்கை வீழ்த்தி சீன ஓபன் பட்டத்தை வென்று, பேட்மிண்டன் தொடரில் கரோலினா கம்பேக் தந்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஐ எம் பேக் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தோனேசியா தொடரின் இறுதிப் போட்டியில் இவரது வலது காலில் காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details