உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி. வி. சிந்து தைவான் நாட்டின் பை யூ போவை (Pai Yu-Po) எதிர்கொண்டார்.
#BWFWorldChampionships: கரோலினா மரினின் சாதனையை சமன் செய்த பி.வி. சிந்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்த ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினின் சாதனையை இந்தியாவின் பி.வி. சிந்து சமன் செய்துள்ளார்.
pv sindhu
இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2013ஆம் ஆண்டில் இருந்து இந்தத் தொடரில் விளையாடிவரும் சிந்துவிற்கு இது 17ஆவது வெற்றியாகும். இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்ற ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
Last Updated : Aug 22, 2019, 7:29 AM IST