தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆசிய உலக சுற்றுப்பயணம் ஜனவரி 2021 க்கு ஒத்திவைப்பு! - ஆசிய உலக சுற்றுப்பயணத் தொடர்

ஆசியன் ஓபன் சூப்பர் 1000 முதல் தொடர், ஆசியன் ஓபன் சூப்பர் 1000 2ஆவது தொடர், உலக சுற்றுப்பயண இறுதித் தொடர் என மூன்று தொடர்கள் பாங்காக்கில் அடுத்த ஆண்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bwf-postpones-asian-leg-of-world-tour-to-jan-2021
bwf-postpones-asian-leg-of-world-tour-to-jan-2021

By

Published : Sep 26, 2020, 6:04 AM IST

கோலாலம்பூர்: 2020ஆம் ஆண்டுக்கான ஆசிய உலக சுற்றுப்பயணத் தொடர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசியன் ஓபன் சூப்பர் 1000 முதல் தொடர், ஆசியன் ஓபன் சூப்பர் 1000 2ஆவது தொடர், உலக சுற்றுப்பயண இறுதித் தொடர் என மூன்று தொடர்கள் பாங்காக்கில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து பிடபிள்யூஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இரண்டு சூப்பர் 1000 போட்டிகளைக் கொண்டிருக்கும். இது BWF உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளுடன் முடிவடையும். இந்த முடிவு வியாழக்கிழமை மாலை நடந்த கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் 2020 சீசன் தற்போது ஜனவரி 2021 இல் முடிவடையும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BWF மற்றும் தாய்லாந்து பேட்மிண்டன் சங்கம், தாய்லாந்து அரசுடன் இணைந்து, மூன்று தொடர்களையும் நடத்துவதற்காக அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான கரோனா வைரஸ் கட்டமைப்பை வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை முடித்துள்ளது.

இதனிடையே சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளை மீண்டும் தொடங்குவதன் மூலம் தாய்லாந்து பேட்மிண்டன் சங்கம் மற்றும் தாய்லாந்து அரசு ஆகியவற்றை BWF பெரிதும் பாராட்டியுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி அசத்தல் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details