உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிதாக ‘ஐ யம் பேட்மிண்டன்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலமாக வீரர்கள் நேர்மையான விளையாட்டை ஆதரிப்பதன் மூலம், இவ்விளையாட்டின் மீதான அன்பையும், மரியாதையையும் காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தோடு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிகான தூதராக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், உலகச்சாம்பியனுமான பி.வி. சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து உலகின் பல முன்னணி பேட்மிண்டன் வீரர்களும் இந்நிகழ்ச்சியின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.