இன்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் தொடர், வங்கதேசத்தின் தலைநகரான தாக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் லெவ்ங் ஜூன் ஹோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்ஷயா சென் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்குகளில் ஜூன் ஹோவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் லக்ஷயா சென், இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இவர் தொடர்ச்சியாக தனது ஐந்தாவது சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார்.