ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பார்சிலோனாவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், இரண்டு முறை ஜூனியர் உலக சாம்பியனான தாய்லாந்தின் குன்லவுட் விடித்சரனை எதிர்கொண்டார்.
ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர்! - அஜய் ஜெயராம்
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் தோல்வியடைந்தார்.
![ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர்! Barcelona Spain Masters: Jayaram crashes out in semi-final as Indian challenge ends](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6175588-thumbnail-3x2-j.jpg)
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அஜய் ஜெயராம் 20-22, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். முன்னதாக, இந்தத் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களான கிதாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சுபாங்கர் தே, பாருபள்ளி காஷ்யப், ஹெச்.எஸ். பிரணாய், சாய் பிரனீத், சாய்னா நேவால் ஆகியோர் தோல்வியடைந்தனர். இந்நிலையில் அஜய் ஜெயராமும் தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இந்திய வீரர்களின் பயணம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க:ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளி, ரவி குமாருக்கு தங்கம்!