கடந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், கரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள் அனைத்து தங்களது வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி, அவர்களைத் தயார் படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இந்திய பேட்மிண்டன் கூட்மைப்பும் வீரர்களை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களுக்கு உதவிடும் வகையில், முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வரும், டென்மார்கின் நட்சத்திர பேட்மிண்டன் வீரருமான மாத்தியாஸ் போவை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பின் செயலாளர் அஜய் சிங்கானியா (Ajay Singhania) கூறுகையில், "ஒலிம்பிக் பதக்கம் வென்ற மாத்தியாஸ் போவை இந்திய இரட்டையர் அணிக்கு பயிற்சியாளராக நியமிப்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஒரு சிறந்த வீரர் மட்டுமின்றி, சிறந்த வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். இவரது அனுபவமும், வழிகாட்டுதலும் நமது வீரர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாய்லாந்தில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுவரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த கோவா - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம்!