ஸ்பெயின்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் தலைநகர் ஹூல்வாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று (டிச. 18) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் லக்ஷயா சென், இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் உடன் மோதினார்.
இப்போட்டியின், முதல் செட்டை லக்ஷயா சென் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பின், சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகாந்த் அடுத்த இரண்டு செட்களை முறையே 21-14, 21-17 கணக்கில் வென்று தனது வெற்றியை உறுதிசெய்தார்.
69 நிமிட ஆட்டம்
இருப்பினும், 20 வயதான லக்ஷயா சென், ஸ்ரீகாந்திற்கு எதிராக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல சர்வீஸ்களில் சென் தனது ஆதிக்கத்தைக் காட்டினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டம் 69 நிமிடங்கள் வரை நீடித்தது.
மேலும், இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ உடன் ஸ்ரீகாந்த மோதவுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா