தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன் தரவரிசை பட்டியல்: முன்னிலையில் காஷ்யப்...சமநிலையில் சாய்னா... சரிவில் சிந்து! - சரிவில் சிந்து

உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் உலகச் சாம்பியனான பி.வி. சிந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Badminton Ranking latest

By

Published : Oct 1, 2019, 11:07 PM IST

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து கடந்த வாரம் கொரியா ஓபனில் சந்தித்த தோல்வி காரணமாக ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

அதேபோல் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால், தொடர் தோல்விகளை சந்தித்தாலும் உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் தனது எட்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப், கொரிய ஓபனில் அரையிறுதி வரை சென்றதினால் தரவரிசை பட்டியலில் மீண்டும் 25 இடங்களுக்குள் முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஒன்பதாவது இடத்தையும், சாய் பிரனீத் 12ஆவது இடத்தையும், சமீர் வர்மா 17ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை தாய்லாந்து ஓபன் தொடரை வென்றதன் மூலம் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க:இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்!

ABOUT THE AUTHOR

...view details