இந்த ஆண்டின் முதல் பேட்மிண்டன் தொடரான மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கெண்டோ மொமொடா முதல்முறையாக மலேசியன் மாஸ்டர்ஸ் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கெண்டோ மொமொடா மற்றும் அவரது குழுவினர் நான்கு பேரும் காரில் பயணம் செய்துள்ளனர். இந்த கார் வேகமாக சென்றபோது, எதிர்பாராவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பவன் நாகேஸ்வரவ் (bavan nageswarau) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேட்மிண்டன் வீரர் மொமொடாவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீரர் இதையடுத்து உடனடியாக நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர், விபத்தில் சிக்கிய நான்கு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் செயல்பாடுகள் தீவிரமாக மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மலேசியன் பேட்மிண்டன் தொடரில் வெற்றிபெற்ற சில மணி நேரங்களில் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு விபத்து ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காட்டுத்தீக்காக ரிக்கி பாண்டிங்கை எதிர்க்கும் வார்னே!