2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாமிடத்தில் இருக்கும் பிவி சிந்துவை எதிர்த்து இந்தோனேசியாவின் சோய்ருன்னிசா ஆடினார்.
பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து! - பிவி சிந்து
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் போட்டியில் இந்தோனேசியாவின் சோய்ருன்னிஸாவை வீழ்த்தி இந்தியாவின் பிவி சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பிவி சிந்து
இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டில் 21-14 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் 21-9 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.