2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி ஒகுஹாராவிற்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ஒகுஹாரா 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.