தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆக்செல்சன்! - ஆண்ட்ரஸ் அன்டோன்செனை

டென்மார்க்கின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் விக்டர் ஆக்செல்சன், ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

All England Open: Viktor Axelsen beats Anders Antonsen in semifinal
All England Open: Viktor Axelsen beats Anders Antonsen in semifinal

By

Published : Mar 21, 2021, 3:39 PM IST

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்செல்சன், சக நாட்டவரான ஆண்ட்ரஸ் அன்டோன்செனை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை அன்டோன்சன் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் சுதாரித்து விளையாடிய ஆக்செல்சன் 21-07 என்ற கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

பின்னர் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி ஆக்செல்சன் 21-17 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி அன்டோன்சனுக்கு அதிர்ச்சியளித்தார்.

இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆக்செல்சன்

இதன்மூலம் விக்டர் ஆக்செல்சன் 16-21, 21-07, 21-17 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரஸ் அன்டோன்செனை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் விக்டர் ஆக்செல்சன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆல் இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details