2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து - தென் கொரியாவின் சிங் ஜி ஹியூன் ஆகியோர் மோதினர்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைக் கைப்பற்ற கடுமையாகப் போராடினர். முதல் செட் ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் வரை நீடித்தது. காலிறுதிப் போட்டியில் சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஒகுஹாரா அல்லது டென்மார்க்கின் ஹோஜ்மார்க் மோதவுள்ளனர்.