தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி! - போர்ன்பவீ சோச்சுவாங்

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

All England Championships: Sindhu suffers defeat in semis
All England Championships: Sindhu suffers defeat in semis

By

Published : Mar 21, 2021, 3:06 PM IST

பிரபல பேட்மிண்டன் தொடரான ஆல் இங்கிலாந்து ஓபன் அந்நாட்டின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (மார்ச் 20) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சோச்சுவாங், சிந்து புள்ளிகளைப் பெற வாய்ப்பளிக்காமல் ஆதிக்கம் செலுத்தினார்.

அரையிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி

43 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சோச்சுவாங் 21-17, 21-09 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இத்தோல்வியின் மூலம் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க:மகளிர் டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

ABOUT THE AUTHOR

...view details