தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தங்கப்பதக்கத்துடன் ரீஎன்ட்ரி தந்த மீராபாய் சானு..! - தங்கம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Mirabhai Chanu

By

Published : Feb 7, 2019, 8:13 PM IST

சர்வதேச அளவிலான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார்.

காயம் காரணமாக கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டி மற்றும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய மீராபாய் சானு முதல் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் டோக்கியோவில் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் இவர் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கோல்ட்கோஸ்டில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details