தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் போட்டியில் வீரநடை போட இருக்கும் இந்திய வீரர்! - ஆசிய நடைப் போட்டி

டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர் கே.டி. இர்பான் தகுதி பெற்றுள்ளார்.

தடகள வீரர் கே.டி. இர்பான்

By

Published : Mar 17, 2019, 6:08 PM IST

ஆசிய அளவிலான நடைப் போட்டி ஜப்பானின் நவோமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர்களுக்கான 20 கிலோ மீட்டர் பிரிவில் இந்திய வீரர் கே.டி. இர்பான் பங்கேற்றார்.

டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 20 கிலோ மீட்டர் நடைப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், இந்த தொடரில் இலக்கை 1 மணி நேரம் 21 நிமிடத்திற்குள் கடக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்ட இர்பான், இலக்கை 1 மணி நேரம் 20 நிமிடம் மற்றும் 57 நொடிகளில் கடந்து நான்காவது இடத்தை பிடித்து அசத்தினார்.

இதன் மூலம், மூன்று நொடிகள் வித்தியாசத்தில் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் நடை போட்டிக்கு இவர் நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இதைத்தவிர, தடகள பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2012 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details