பின்லாந்து ஹெல்சன்கியில் ஜிபி குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில் 15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 56 கிலோ எடைப் பிரிவின் இறுதி போட்டியில், இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் - ஹுசாமுதீன் இடையே நடைபெற்றது. இதில் 5-0 என ஹுசாமுதீனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்! - இந்தியா
பின்லாந்து : ஜிபி குத்துச்சண்டை தொடரில் இந்தியா வீரரகள் ஒரு தங்கம், நான்கு வெள்ளி பதக்கங்கள், மூன்று வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
gee bee
அதேபோல், 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கோவிந்த் சஹானி தாய்லாந்தின் பன்மோத்திடன் இறுதி போட்டியில் தோல்வியடைந்து, வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், சிவா தபா, தினேஷ் தாகர் வெள்ளி பதக்கத்தையும், 52 கிலோ எடை பிரிவில் சச்சின் சவாச் வெண்கலமும், 91 கிலோ எடை பிரிவில் சுமித் சங்வான், நவீன் குமார் ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.