தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

400 மீ ஓட்டபந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்று சாதனை! - தங்கம்

பட்டியாலா : 23-வது ஃபெடரேசன் கோப்பைக்கான 400மீ ஓட்டபந்தயத்தில், இந்திய நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸ் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தங்கம் வென்ற ஹீமா தாஸ்

By

Published : Mar 19, 2019, 10:21 PM IST


இந்தியாவில் 23-வது ஃபெடரேசன் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றுது. இதில் பெண்கள் 400 மீ ஓட்டபந்தயத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸ் கலந்துகொண்டார்.

இப்போட்டிக்கு முன்னதாக, ஹீமா தாஸ் தனது 12-வது வகுப்பு தேர்வுக்காக ஒருமாதமாக பயிற்சியை நிறுத்தி வைத்தார். அதற்கு பின் இந்த போட்டியில் கலந்துகொண்ட ஹீமா தாஸ், 400மீ பந்தயத்தை 52.88 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

அதுமட்டுமல்லாமல், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய ட்ராக் மற்றும் ஃபீல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details