லாஸ் ஏஞ்சலஸ்:நடிகை சூயி டெஸ்சனல் தனது 5 வயது மகள் எல்சியை அதீத சுதந்திரமுடையவள் என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தனது 2 வயது மகன் சார்லி, சமூகத்தை நேசிக்கும் தன்மையுடையவர் என தெரிவித்துள்ளார்.
என் மகள் அதீத சுதந்திரமுடையவள் - சூயி டெஸ்சனல் - Hollywood news
பொறுமையாக படம் எடுக்கப்பட்டால் கலைஞர்களுக்கு பதற்றம் குறையும். திரைப்படங்களை உருவாக்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது என சூயி டெஸ்சனல் தெரிவித்தார்.
தி ட்ரியூ பேரிமோர் ஷோவில் கலந்துகொண்ட சூயி டெஸ்சனல், எனது மகள் எல்சியை அதீத சுதந்திரமுடையவள். எனது மகன் சமூகத்தை நேசிக்கும் தன்மையுடையவன் என தெரிவித்தார்.
திரைப்படங்கள் குறித்து கேட்டதற்கு, அதிகமான கட் இல்லாத, கதை சொல்ல பொறுமையாக நேரம் எடுத்துக்கொள்கிற படங்களைதான் நான் விரும்புவேன். நாம் நடித்ததை பார்ப்பது அலாதியான அனுபவம், பொறுமையாக படம் எடுக்கப்பட்டால் கலைஞர்களுக்கு பதற்றம் குறையும். திரைப்படங்களை உருவாக்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது என்றார்.