தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூப்பர் ஸ்டாரை அடுத்து காட்டுக்குள் செல்லும் நடிகர்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பக்கேற்க பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் தேர்வாகியுள்ளார்.

காட்டுக்குள் செல்லும் நடிகர், மேன் vs வைல்ட், டிஸ்கவரி தொலைக்காட்சி, அஜய் தேவ்கன், ajay devgan, man vs wild, bear grylls, discovery channel, discovery plus
அஜய் தேவ்கன்

By

Published : Sep 13, 2021, 12:42 PM IST

ஹைதராபாத்: டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபல மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் கலந்துகொள்கிறார்.

இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் என்பது ஒரு சர்வைவல் ரியாலிட்டி ஷோ. இதில் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்று வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சன்னிங் டாட்டம், பென் ஸ்டில்லர், மிஷெல் ரோட்ரிக்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் மேன் வெர்சஸ் வைல்ட் வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதோடு நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

ரஜினியை அடுத்து அஜய்

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும், மொழிபெயர்ப்பு செய்து ஒளிபரப்பட்டு வருகிறது. விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவற்றுடன் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி திகிலாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்றது. இது விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

பியர் கிரில்ஸ்

பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர், சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான, பார்ன் சர்வைவர் என்பதன் மூலம் பிரபலமடைந்தார், அந்த நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட் என்று இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறியப்படுகிறது.

மிக இளவயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பிரிட்டிஷ் நபர்களில் இவர் ஒருவராவார். இந்த சாதனையை 23 வயதில் செய்தார். ஜூலை 2009இல், தன்னுடைய 35 வயதில், தலைமை சாரணராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே இதுவரையில் இந்த பதவியில் இருந்தவர்களில் மிக இளவயது நபராவார்.

ABOUT THE AUTHOR

...view details