தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேக்-அப் செய்யணும்...டெலிவரியை தள்ளி போட முடியுமா? பிரசவ வலியில் கிம் செய்த அலம்பல் - கிம் கர்தாஷியன் ரியலிட்டி டிவி நிகழ்ச்சி

நான் இப்பவே டெலிவரி செய்து கொள்ள வேண்டுமா? இரண்டு மணி நேரம் தந்தால் நகத்தை வேறு நிறத்தில் அலங்காரம் செய்து விட்டு வருகிறேன் என பிரசவ வலி ஏற்பட்டபோது டாக்டரிடம் கேட்டுக்கொண்டதை நினைவுபடுத்தியுள்ளார் கிம் கர்தாஷியன்.

கிம் கர்தாஷியன் தனது குழந்தை நார்த் வெட்டுடன்

By

Published : Sep 21, 2019, 1:43 PM IST

லாஸ் ஏஞ்சலிஸ்: அலங்காரம் செய்வதற்காக பிரசவ வலி ஏற்பட்ட நேரத்தில் டெலிவரியை இரண்டு மணி நேரம் தள்ளிப்போட்டுள்ளார் ஹாலிவுட் ரியாலிட்டி டிவி பிரபலம் கிம் கர்தாஷியன்.

கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் கிம் கர்தாஷியன் 'கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ்' என்று ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறார். கிம்மின் அன்றாட வாழ்கையின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், தனது முதல் குழந்தையான நார்த் வெஸ்ட்டை பெற்றெடுக்கும்போது தனது டெலிவரியை தள்ளிப்போட்டது குறித்து நிகழ்ச்சியில் விவரித்துள்ளார் கிம்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு முதல் பிரசவ வலி ஏற்பட்ட நாளில் டிவி பிரபலம் ஜோனத்தன் சீபனுடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பாப்பராசி (செய்தி சேகரிக்கும் புகைப்படங்காரர்கள்) எங்களை பின் தொடர்ந்து வந்தனர்.

நான், எனது கை நகங்களுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்றுகொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கை, கால்கள் வீங்கின. பின்னர் டாக்டரிடம் விசாரித்தபோது பிரசவலி வந்துவிட்டது, உடனடியாக டெலிவரி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தனது குழந்தை நார்த் வெட்டுடன் ஜாலியாக விளையாடும் கிம் கர்தாஷியன்

ஆனால் அவரிடம் பெண் குழுந்தை பெற்றெடுக்கபோகும் நான், டெலிவரியின்போது பிங்க் நிறங்களில் நகங்களை மாற்றியமைக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால் இப்பவே டெலிவரியை வைத்துக்கொள்ளாமல் இரண்டு மணி நேரம் தள்ளி போட முடியுமா? எனக் கேட்டேன். அதற்கு டாக்டரும் சம்மதம் தெரிவித்தார் என்று பிரசவ தருணத்தின் பின்னணிக் கதையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தனது முதல் குழந்தையான நார்த் வெஸ்டை பெற்றெடுத்தார் கிம் கர்தாஷியன்.

ABOUT THE AUTHOR

...view details