தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நாயை வைத்து படம் எடுப்பது மிகக் கடினம்' -இயக்குனர் விஜய் பிரத்யேக பேட்டி!

சென்னை: இதுவரை நான் த்ரில்லர் படம் எடுத்ததில்லை. ஒரு த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன் அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது என இயக்குநர் ஏ.எல். விஜய் ஈ டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

நாயை

By

Published : Apr 13, 2019, 3:25 PM IST

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வாட்ச் மேன்’. நேற்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், திரைப்படம் குறித்து இயக்குநர் விஜய்யிடம் ஈ டிவி பாரத் சார்பாக கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

வாட்ச் மேன் படம் வெளியானது குறித்து?

வாட்ச் மேன் படம் ரிலீஸ் ஆயிருக்கு. தியேட்டர் சென்றோம் பொதுமக்கள் எல்லாரும் நன்றாக ரசித்து படம் பார்க்கின்றனர். நல்ல ஒரு த்ரில்லர் படம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இந்தக் கருத்து இன்னும் அதிகம் மக்களுக்கு பரவும் என்று நினைக்கிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு நாயை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்குத் தோன்றியது?

இதுவரை நான் த்ரில்லர் படம் எடுத்ததில்லை. ஒரு த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன் அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதை என் மனதில் தோன்றிய உடனே நடிகர் ஜிவி பிரகாஷிடம் கூறினேன். அவர் ஆர்வமாக நடிக்க ஒப்புக் கொண்டார். இதேபோன்று புரூனோ என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நாய் நடிக்க வேண்டி இருந்தது. அந்த நாயும் மிகச் சரியாக எங்களுக்கு அமைந்தது.

Bruno என்ற நாயை எப்படி வேலை வாங்கினார்கள்?

குழந்தையையும் மிருகங்களையும் வைத்து படம் பண்ணுவது என்பது அவ்வளவு எளிதல்ல, மிகவும் கடினமான ஒன்று. இதில் ப்ரூனோ என்ற நாயை வேலை வாங்குவது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு சரியான ட்ரெய்னர் இருந்ததால் ஒவ்வொரு ஷாட்டையும் ஆலோசித்து டிசைன் பண்ணிதான் நாங்கள் எடுத்தோம் . இதனால்தான் திட்டமிட்டபடி இந்தப் படம் நன்றாக வந்துள்ளது.

படத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்த காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்?

படம் முழுவதுமே கஷ்டப்பட்டுதான் நாங்கள் எடுத்தோம். ஏனென்றால் எல்லா காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆக்ஷன் இருக்கு. ஆக்ஷன் இல்லாமல் இந்தப் படமே இல்லை. படம் முழுக்க ஆக்ஷன் இருந்ததால் எனக்கு படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. மிகச்சரியான டெக்னீஷியன்ஸ் இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எட்ட முடிந்தது.

படத்தில் இடைவேளை இல்லாமல் இருந்தால் படம் எடுப்பது பற்றி உங்கள் கருத்து?

நம்ம தமிழ் சினிமாவிற்கு இன்டர்வெல் பிளாக் என்பது தேவைப்படுகிறது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். நாங்கள் இன்டர்வெல் விடவில்லை என்றாலும் படத்தை கட் பண்ணி திரையரங்குகள் இன்டர்வெல் விட்டுவிடுவார்கள். ஆங்கிலப் படங்கள் அவ்வாறுதான் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டு வருகின்றன. அதனால் இன்டர்வெல் அனுமதித்துள்ளோம்.

ABOUT THE AUTHOR

...view details