தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலகலவென பேசிக்கொண்டிருக்கும் தொகுப்பாளினி என்றால் மணிமேகலையை குறிப்பிட்டு சொல்லலாம். அவரது தனித்துவ பேச்சால் மக்களை தன் பக்கம் ஈர்த்துக்கொள்வார். இந்நிலையில், ஊரடங்கை தனது கணவரின் கிராமத்தில் செலவழித்துக்கொண்டிருக்கும் வேளையில், ரமலான் திருநாளையும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
இந்நிலையில், ரமலான் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் மணிமேகலை. அதில் கணவருடன் இஸ்லாமியர்கள் அணிந்துகொள்ளும் ஆடையுடன் இருப்பதை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவரது புகைப்படத்துக்கு பல எதிர்மறையான கருத்துகள் மக்களிடம் இருந்து குவிந்தன.
இதைதொடர்ந்து 'எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றி விட்டான். இதற்கு பெயர் தான் லவ் ஜிகாத்' என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் மணிமேகலை மீண்டும் ஒரு பதிவு செய்திருந்தார்.
அதில், 'ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறிட்டுதான் சொல்லனுமா, யாரும் இங்க மதம் மாறல, ஹூசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜானும் கொண்டாடுவோம். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், உங்கள் குழப்பங்களை இங்கு வந்து கொட்டவேண்டாம். நன்றி' என குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த பதிலை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க...'நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாதிப் படங்கள் சித்தரிப்பதில்லை'