தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்து வருகிறது. இதன் காராணமாக கடந்த சில வாரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சமீபகாலமாக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருவது அதிகரித்துள்ளது.
நடிகர் விவேக், இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், தாமிரா, கே.வி. ஆனந்த், நடிகர்கள் பாண்டு, 'நெல்லை' சிவா, மாறன் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.